VOOZH about

URL: https://tamil.indianexpress.com/tamilnadu/bigil-movie-review-rating-bigil-movie-review-bigil-movie-tamil-review/

⇱ Bigil Movie Review : பிகில் படத்தின் பலமும் பலவீனமும்


👁 Image
செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.

Bigil Movie Review : பிகில் படத்தின் பலமும் பலவீனமும்

பிகில் ராயப்பன் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'  என்ற பாடலைக் கேட்கும் பொழுது, ரசிகர்கள் மத்தியில் கரகோஷங்கள் தான்

Written byWebDesk

பிகில் ராயப்பன் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'  என்ற பாடலைக் கேட்கும் பொழுது, ரசிகர்கள் மத்தியில் கரகோஷங்கள் தான்

WebDesk
புதுப்பிக்கப்பட்டது

👁 Image
Follow Us

New Update
👁 Bigil Movie Review, Bigil Movie Ratings : பிகில் திரைப்படம் விமர்சனம்

Bigil Movie Review, Bigil Movie Ratings : பிகில் திரைப்படம் விமர்சனம்

Bigil Vijay Movie Review : பிகில்  திரைப்படத்தின் இயக்குனர் அட்லி  வெகுஜன மக்களின் நாடி துடிப்பை நன்கு கணித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். வரும் ரசிகர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்திராமல், ரசிகர்களின் உணர்வை வைத்தே படத்தை இயக்கியுள்ளார். 'பிகில்' படத்தில் நேர்பட அரசியல் பேசப்படவில்லை என்றாலும், மறைமுக அரசியல் ஆங்காங்கே வந்து செல்கிறது. பிகில் ராயப்பன் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'  என்ற பாடலைக் கேட்கும் பொழுது, ரசிகர்கள் மத்தியில் கரகோஷங்கள் தான்.

Advertisment

பிகில் திரைப்படம ஷாருக் கானின் சக் தி இந்தியா, ஆமிர் கானின் தங்கல் போன்ற  பாணியில் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்தாக வேண்டும். சக் தி இந்தியா போன்று முயற்சி செய்து பலனளிக்கவில்லையா  ? அல்லது,  திட்டமிட்டே அந்த சாயல் வேண்டாம் என்று அட்லி நினைத்தாரா? என்பது தான் இப்படத்தில் நமக்கு வரும் முதல் குழப்பம்.

ஸ்போர்ட்ஸ் படங்களில் பொதுவாக கோச்சாக வரும்  நபர் தனது அணியை உருவாக்குவார், சிறந்த அணியை உருவாக்கும் யுக்திகளை யோசிப்பார்.  ஆனால், பிகிலின் மைக்கல் விஜய், அணியில் இருப்பவர்களை அவமதிப்பு செய்வதன் மூலம் , ஊக்குவிக்குறார். சில சமயங்களில் இந்த செயல் முறை சற்று கசப்பை எற்படுத்திகிறது. உதாரணமாக , அணியில் இருக்கும் ஒரு பெண் வீராங்கனையை பல முறை 'குண்டம்மா' என்று சொல்லி அவரை ஊக்குவிக்கிறார்.  ஆனால் , சமூகத்தில் இதன் வெளிப்பாடு சற்று ஏற்புடையதாக இருக்காது.

Advertisment

Bigil Vijay Movie Review

விஜய்யின் அப்பா  கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராயப்பன் படத்தின் மிகப்பெரிய பலம். ராயப்பன் கதாப்பாத்திரத்தின்  எதார்த்தம் நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். இருந்தாலும், நாயகன் கமல ஹாசனையும், காலா ரஜினியையும் நியாபகப் படுத்துவதாகேவே நான் நினைக்கின்றேன் . மெர்சல் அபூர்வ சகோததர்களை நியாபக படுத்தினால், பிகில் தற்போது எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படம்.

ஜாக்கி ஷிராஃப், டேனியல் பாலாஜி அவர்களின் திறமையை இன்னும் வெளிபடுத்த வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

நயன்தாரா, மைக்கல் விஜய்யின் காதலில் மட்டுமே வாழ்கின்றார். வழக்கமான  தமிழ் ஹீராயின்  என்ன செய்வார்களோ? அதே தான் செய்துள்ளார்.

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:

அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது.

Read More →
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
Read the Next Article