VOOZH about

URL: https://x.com/erasaravanan

⇱ இரா.சரவணன் (@erasaravanan) / X


இரா.சரவணன்
6,397 posts
இரா.சரவணன்
@erasaravanan
முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...
Chennai
Born July 28, 1981
Joined July 2014
  • Pinned
    ‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… #Nandhan#நந்தன்
  • ஒரு மாபெரும் வெற்றியை எளிமையாகக் கொண்டாடுவதுதானே பொருத்தமாக இருக்கும்... விவசாயிகளிடம் கரும்பு வாங்கி, இனிக்க இனிக்க ‘துணிவு’ பொங்கலை இயக்குநர் அ.வினோத்துடன் கொண்டாடிய தருணம்... #Thunivublockbuster
  • எங்கள் படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. மனம் கசிந்தவராக தன்னால் முடிந்த உதவியைச் செய்து மருத்துவமனையை எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்... அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி வாழ்க பல்லாண்டு! #HappyBirthdayJyothika
  • "என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்" என்றார் #நெல்_ஜெயராமன் தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் "நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை" என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!
  • அறிமுகம் இல்லா எண்ணிலிருந்து அழைப்பு… “சரவணன் சாருங்களா…? ரஜினி சார் ‘நந்தன்’ படம் பார்த்தார். இப்போ உங்ககிட்ட பேசுவார்” என்றார்கள். ரோட்டில் நின்ற நான் எப்படி என் அலுவலக அறைக்குள் ஓடிவந்து கதவைச் சார்த்திக் கொண்டேன் என்பதுகூடத் தெரியாது. போன் வந்தது. பூவைத் தொடுவதுபோல் போனை
  • கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள்
  • நடிகர் சூரியிடம் கதறிய செருவாவிடுதி பாட்டி "புயல்ல என் போன் தொலைஞ்சதால பேரன்கிட்ட பேச முடியலை" என்றார். சென்னை போன சூரி, ஒரு செல்போனும் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி இருக்கிறார். கார் ஏறியதும் ஊர் மறப்பவர் மத்தியில், சூரி சூப்பர் ஸ்டார்!
  • 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கொரோனா தடுப்புக்காக மதுரை மாவட்டம் அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் சண்முகப்பிரியா தொற்றால் இறந்திருப்பது மனதை கலங்கடிக்கிறது. அளவிட முடியாத அர்ப்பணிப்பும் தியாகமும் கொண்ட சகோதரியே, கண்ணீருடன் கும்பிடுகிறோம்.
  • 1969ம் ஆண்டு வேண்டுதலுக்காக முடிந்து வைத்த ஒருபடி நெல்லை 2012ல் கண்டுபிடித்து பாகி 490 கிலோ அறுவடை செய்து காட்டியவர் #நெல்ஜெயராமன் 43 ஆண்டுகளுக்கு பிறகும் முளைக்கும் திறன்கொண்ட பாரம்பரிய #கைவரச்சம்பா நெல்லை மீட்டவர். #நெல்_ஜெயராமன் தமிழினத்தின் சொத்து. அவர் நலம் பெற வேண்டுவோம்!
  • கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் சசிகுமார். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார். உளப்பூர்வமான பணி @SasikumarDir
  • "படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். #நந்தன் அருமையான படைப்பு” -சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி 🙏 #Nandhan@SasikumarDir@thondankani@tridentartsoffl
Don't miss what's happening
People on X are the first to know.